Friday, January 18, 2008

திருவண்ணாமலை திருவூடல் திருவிழா

பிருங்கி மகரிஷிக்கு அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து காட்சியளித்தார்.சிவ பக்தரான பிருங்கி மகரிஷிக்கு ஆண்டுதோறும் தை மாதம் 3ம் தேதி அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து காட்சி கொடுப்பார். நேற்று முன்தினம் இரவு அண்ணாமலையார் தனியாக கிரிவலம் செல்லும் போது பராசக்தி அம்மனுக்கு கோபம் ஏற்பட்டு ஊடல் ஏற்பட்டு அதை சமாதானம் செய்யும் தூதுவராக சுந்தரர் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் இரவு கிரிவலப்பாதையில் உள்ள குமரக்கோயிலில் அருணாசலேஸ்வரர் தங்கி, நேற்று பகலில் கிரிவலம் வந்து அடி அண்ணாமலையில் பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்தார். பின் அருணாசலேஸ்வரர் கோயில் திரும்பும்போது, பராசக்தி அம்மனால் ஏவப்பட்ட மாயையினால் அவர் அணிந்திருந்த நகையை பறிகொடுக்கும் நிகழ்ச்சியும், அதனால் அவர் வெற்றுடம்பாக கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.தொடர்ந்து அருணாசலேஸ்வரர் திருநடனம் ஆடும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து கூடல் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது அருணாசலேஸ்வரர் பராசக்தி அம்மனுடன் எழுந்தருவி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

1 comment:

தமிழ் இயலன் said...

Anbulla aiya
Thangalai Thiruvannamalayil sandhitha pirahu ARUNAI OLI kanden
vaazhthukal
THAMIZHIYALAN